பாசமாய் பேசினாள்
பரிதாபம் என நினைத்தேன்!
காதலோ என எண்ணி
கண்களில் தேடினேன் நான்!
காவிய நாயகியே என விழித்து
கவிவரி எழுதினேன் நான்!
இதயத்தில் ஏறி நின்று
ஈர மனதை பிழிந்தவளே!
உதயம் எப்போ காண்பேன் நான்!
ஊன் உறக்கம் மறந்து விட்டேன்
உன் நினைப்பால் துவண்டு விட்டேன்!
ஊர் விழிக்கும் முன்னாலே
கண் விழித்து செய்தி சொல்லு
கார் குழலால் வருடிச் செல்லு!